Jun 8, 2025 - 06:38 PM -
0
கொலம்பிய செனட்டரும் 2026 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (வயது 39), தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து அவரைச் சுட்டனர்.
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் மேல் கிடப்பதும், மக்கள் உதவ விரைவதும் தெரிகிறது.
அவரது கழுத்து அல்லது தலையில் தோட்டா தாக்கியதாகவும், தற்போது வைத்தியசாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொலம்பிய ஜனாதிபதி அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

