Jun 11, 2025 - 05:32 PM -
0
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று (11) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் மத்திய வானிலை நிலையத்தை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் 30.9 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

