செய்திகள்
குடு தமிழ் இறந்தமைக்கான காரணம் வௌியானது

Jul 5, 2025 - 09:33 PM -

0

குடு தமிழ் இறந்தமைக்கான காரணம் வௌியானது

தென் பிராந்தியத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் மிகவும் பழமை வாய்ந்தவராக கருதப்படும் தெவுந்தர "குடு தமிழ்" என்று அழைக்கப்படும் தமிழ் அஜித் குமார, மூளை புற்றுநோயால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர் தடுப்புக் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இவ்வாறு கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடு அஜித் என்றும் அழைக்கப்படும் தமிழ் அஜித் குமார, நேற்று (04) காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மலக்குடலில் தோன்றிய புற்றுநோய், முதுகெலும்பு வழியாக மூளைக்கு பரவியதால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

தென் பிராந்தியத்தில் தனது போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்த குடு தமிழ், தென் பிராந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த போதைப்பொருள் வியாபாரி என கருதப்படுகிறார். 

மனித கொலை வழக்கு தொடர்பாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அந்த தண்டனையை எதிர்த்து குடு தமிழ் மேன்முறையீடு செய்தார். 

இதற்கமைய அவர் கடந்த 23 ஆம் திகதி அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். 

இருப்பினும், அவர் மற்றொரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05