Header Logo

வணிகம்
ஆசிய வங்கியியல் மற்றும் நிதி விருதுகள் 2025 இல் கொமர்ஷல் வங்கி ஆறு சிறப்பு விருதுகளை வென்றது

Jul 31, 2025 - 03:32 PM -

0

ஆசிய வங்கியியல் மற்றும் நிதி விருதுகள் 2025 இல் கொமர்ஷல் வங்கி ஆறு சிறப்பு விருதுகளை வென்றது

கொமர்ஷல் வங்கியானது 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கியியல் மற்றும் நிதி (ABF) விருதுகளில், சில்லறை, மொத்த விற்பனை மற்றும் பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கி பிரிவுகளில் ஆறு மதிப்புமிக்க விருதுகளை வென்றதன் மூலம், இலங்கையின் வங்கித் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

நிதியியல் சேவைகளில் சிறந்து விளங்குதல், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் ABF விருதுகள், ஆசியாவின் கடுமையான போட்டி நிறைந்த வங்கித் துறையில் சிறந்து விளங்குவதை எடுத்துக் காட்டுகின்றன. கொமர்ஷல் வங்கியின் சமீபத்திய வெற்றிகள், ஒரு முன்னோக்கிச் சிந்திக்கும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிதியியல் நிறுவனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன. 

சில்லறை வங்கியியல் பிரிவில், கொமர்ஷல் வங்கி ஆண்டின் தனியார் வங்கி மற்றும் ஆண்டின் SME வங்கி என முடிசூட்டப்பட்டது. அதேவேளை மொத்த வங்கிச் சேவையின் கீழ், ஆண்டின் உள்நாட்டு ESG திட்டம் மற்றும் ஆண்டின் உள்நாட்டு வர்த்தக நிதி வங்கி ஆகிய விருதுகளை வங்கி பெற்றது. மேலும் வங்கியானது பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கிப் பிரிவில், ஆண்டின் கடன் ஒப்பந்தம் மற்றும் ஆண்டின் சமபங்கு ஒப்பந்தம் ஆகிய விருதுகளை பெற்றது. 

ஆண்டின் சிறந்த தனியார் வங்கி விருதை வென்ற நிலையில் விதிவிலக்கான 2024 ஆண்டைத் தொடர்ந்து, வங்கி அனைத்து முக்கிய நிதியியல் செயல்திறன் குறிகாட்டிகளிலும் அதன் சகாக்களுக்கு வழிகாட்டியது. 

ஆண்டின் சிறந்த SME வங்கி என்ற விருதானது, SME துறையை ஆதரிப்பதில் கொமர்ஷல் வங்கியின் முக்கிய பங்கை மேலும் அங்கீகரிக்கிறது. நிதி அமைச்சின் 2023 ஆண்டு அறிக்கைக்கிணங்க, வங்கி தொடர்ந்து நான்காவது ஆண்டாக SME களுக்கு மிகப்பாரிய கடன் வழங்குநராக திகழ்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் SME களுக்கு மிகவும் நம்பகமான நிதியியல் பங்காளராக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு, இந்த முக்கியமான துறையை தொடர்ந்து வழிநடத்துவதாக நம்புவதாக வங்கி தெரிவித்துள்ளது. 

இலங்கையின் உள்நாட்டு ESG நிகழ்ச்சித்திட்டத்திற்கான விருதானது, நிலையான வங்கிச் சேவையில் கொமர்ஷல் வங்கியின் முன்னோடிப் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. உள்நாட்டு நிதியியல் சேவைத் துறையில் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கான அளவுகோலை வங்கி தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. 

கொமர்ஷல் வங்கியானது 2024 ஆம் ஆண்டில் வர்த்தக நிதித் துறையில், ஏற்றுமதி சந்தையில் 21.2% பங்கையும் இறக்குமதி சந்தையில் 14.26% பங்கையும் கொண்டிருந்ததைக் கருத்தில் கொண்டு, அதன் மூலோபாய, தரவு சார்ந்த அணுகுமுறையின் விளைவாக, ஆண்டின் இலங்கை உள்நாட்டு வர்த்தக நிதி வங்கி என்று அங்கீகரிக்கப்பட்டது. 

2024 ஜூலையில் வங்கியின் முதலீட்டு வங்கிப் பிரிவால் Basel IIIற்கு இணக்கமான பட்டியலிடப்பட்ட கடனீட்டுப் பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 20 பில்லியனை அங்கீகரிப்பதற்காக ஆண்டின் கடன் ஒப்பந்தம் - இலங்கை விருது வழங்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை அந்த ஆண்டு இலங்கையில் பட்டியலிடப்பட்ட கடன் கருவிகளின் மிகப்பாரிய பொதுச் சந்தை வெளியீடாக மட்டுமல்லாது, கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப்பாரிய ஒன்றாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. 

மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title