Header Logo

வணிகம்
SLIIT தற்போது உலகின் முன்னணி 20 கட்டடக்கலை கல்லூரிகள் மத்தியில் இடம்பிடித்துள்ளது - இலங்கையில் 1 வது தரத்தில் உள்ளது

Jul 31, 2025 - 03:35 PM -

0

SLIIT தற்போது உலகின் முன்னணி 20 கட்டடக்கலை கல்லூரிகள் மத்தியில் இடம்பிடித்துள்ளது - இலங்கையில் 1 வது தரத்தில் உள்ளது

இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிலையம் (Sri Lanka Institute of Information Technology - SLIIT), சமீபத்தில் வெளிவந்துள்ள INSPIRELI சர்வதேச கட்டடக்கலை பல்கலைக்கழங்களின் தரப்படுத்தல் பட்டியலில் உலகின் முன்னணி 20 கட்டடக்கலை கல்லூரிகளுள் ஒன்றாகவும், இலங்கையில் 1 வது தரத்தில் உள்ளதாகவும் தரப்படுத்தப்பட்டு, பெருமையையும், வரலாற்று சாதனையையும் நிலைநாட்டியுள்ளது. மாணவர்கள் மற்றும் இளம் கட்டடக்கலை வல்லுனர்களுக்கான உலகின் மிகப் பாரிய கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு போட்டியான INSPIRELI விருதுகள் நிகழ்வில் மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த சர்வதேச அங்கீகாரம் வெளியிடப்பட்டுள்ளது. 2023-2024 காலச்சக்கரத்தில் சர்வதேசரீதியாக இதில் பங்குபற்றிய 1,360 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மத்தியில் 17 வது ஸ்தானத்தை SLIIT எட்டிப்பிடித்துள்ளதுடன், கடந்த ஆண்டில் 22 வது ஸ்தானத்திலிருந்து இவ்வாண்டு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆசியாவின் முதல் 2 ஸ்தானங்களிலுள்ள கட்டடக்கலை கல்லூரிகள் என்ற பெருமைக்குரிய தரப்படுத்தலையும் அது பெற்றுள்ளதுடன், கட்டடக்கலை கற்கையில் பிராந்தியத்தில் முன்னோடி என்ற தனது அந்தஸ்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. 

2015 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட INSPIRELI விருதுகள், 150 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கட்டடக்கலையைப் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, மற்றும் இலட்சியத்தைக் காண்பிக்கும் வகையில் சர்வதேச ரீதியாக நன்மதிப்பைப் பெற்றுள்ள மேடையாக வளர்ச்சி கண்டுள்ளது. ஏனைய போட்டிகள் பலவற்றைப் போலவன்றி, INSPIRELI எவ்விதமான நுழைவுக் கட்டணங்களையும் அறவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதுடன், எவ்விதமான நிதியியல் பின்னணிகளுக்கும் அப்பால் அனைத்து மாணவர்களும் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்கின்றது. இப்போட்டியானது வெறுமனே ஒரு வடிவமைப்பின் கொண்டாட்டமாக மாத்திரமன்றி, கல்வி விழுமியங்கள் மற்றும் மனிதாபிமான நோக்கம் ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளதுடன், பெய்ரூட் துறைமுகத்தின் புதுப்பித்தல், மற்றும் எத்தியோப்பியாவிலுள்ள செக் தூதரகம் போன்ற நிஜ உலக செயற்திட்டங்கள் அடங்கலாக, கடந்த கால சவால்களையும் கையாண்டுள்ளது. இதன் விளைவாக, இப்போட்டியில் காண்பிக்கப்படும் மாணவர்களின் பெறுபேறுகள், கல்வி மற்றும் படைப்பாற்றல் மகத்துவத்தின் உண்மையான வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. 

சர்வதேச அரங்கில் SLIIT ன் தொடர்ச்சியான எழுச்சியானது, அதன் கட்டடக்கலை கற்கைநெறிகளின் வலிமை, அதன் கற்கைபீடத்தின் அர்ப்பணிப்பு, மற்றும் அதன் மாணவர்களின் படைப்பாற்றல் இலட்சியம் ஆகியவற்றுக்கு சான்று பகருகின்றது. தொழில்நுட்ப திறன்களைக் கொண்டவர்களாக மாத்திரமன்றி, சமூகத்தின் நன்மைக்கான வலுவாக வடிவமைப்பினை பரந்தளவில் புரிந்துகொள்கின்றவர்களாக, புத்தாக்கம்மிக்க, தொழில்துறையில் தயார்நிலை கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதில் இப்பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் சுட்டிக்காட்டுகிறது. இப்பாடசாலையின் வளர்க்கும் மற்றும் வலுவான ஸ்டூடியோ கலாச்சாரமானது, தனிப்பட்ட ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் சூழலை வளர்ப்பதுடன், கடுமையான கற்கைத் தராதரங்களைப் பேணி, மாணவர்கள் சர்வதேச அனுபவத்தைப் பெற்று, வளம் காண்பதற்கு உகந்த சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது. 

இச்சாதனை வெறுமனே புள்ளிகளின் அடிப்படையிலான தரப்படுத்தல் என்பதற்கும் அப்பாற்பட்டது. உலகளாவில் ஒன்றியுள்ள கல்வியை இலங்கையில் வழங்கி, தெற்காசியாவில் கட்டடக்கலை புத்தாக்கத்தின் மையமாக SLIIT ன் நன்மதிப்பு அதிகரித்துச் செல்வதைக் குறிக்கின்றது. இதில் இணைந்து கொள்ளும் திட்டங்களைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்புத் தொழிலுக்கான அத்திவாரத்தை இட்டுக்கொள்வதற்கு SLIIT ன் கட்டடக்கலை கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களை ஈர்க்கும் காரணமாகவும் காணப்படுகின்றது. பரந்தளவிலான வடிவமைப்புச் சமூகத்தைப் பொறுத்தவரையில், இலங்கையிலுள்ள கற்கைநிலையங்களால் சர்வதேச அரங்கில் போட்டியிட முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்தின் கூட்டாண்மையுடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்ற பட்டப்படிப்பு கற்கைநெறிகளை இப்பல்கலைக்கழகம் தொடர்ந்தும் வழங்கி வருவதுடன், உள்நாட்டு அறிவு மற்றும் சர்வதேச கற்கைத் தராதரங்கள் ஆகிய இரண்டையும் மாணவர்கள் பெற்றுப் பயனடைவதை உறுதி செய்கின்றது. 

கட்டடக்கலை பீடத்தின் முதல்வர் பேராசிரியர் லலித் டி சில்வா அவர்கள் இது குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கையில், “இது SLIIT ல் எம் அனைவருக்கும் பெருமையளிக்கும் ஒரு தருணம். எமது தரமான கல்வியின் கட்டமைப்பின் பலம் மற்றும் கட்டடக்கலை கல்லூரியில் நாம் வழங்கும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஆகியவற்றை இது பிரதிபலிக்கின்றது. மாணவர்கள் வளர்ச்சி கண்டு, ஆராய்ந்து, மற்றும் தமது ஆற்றல்களை வெளிக்காண்பிப்பதற்கு மிகவும் உகந்த சூழலை வழங்கும் முழுமையான ஆற்றல் எமக்கு உள்ளது. இது குறித்த எண்ணம் கொண்ட மாணவர்கள் SLIIT பல்கலைக்கழகத்தில் தனது கட்டடக்கலை பயணத்தை ஆரம்பிக்கும் சாத்தியங்களை ஆராய்வதற்கு இது அவர்களுக்கு உத்வேகமளிப்பதுடன், தற்போது கல்வி பயின்று வருகின்ற எமது மாணவர்கள் தமது படைப்பாற்றலின் மகத்துவத்தை “படைப்புலகில்” காண்பித்து, அங்கீகாரத்தைச் சம்பாதித்துக் கொள்வதை உறுதி செய்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் எமது பல்கலைக்கழகங்களால் குறிக்கோள் மற்றும் மகத்துவத்தை சிறப்பாக வழிநடாத்திச் செல்ல முடியும் என்பதை இது நினைவுபடுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார். 

இச் சாதனையுடன், வடிவமைப்பு என்பது வெறுமனே கட்டங்கள் சார்ந்தது என்பது மாத்திரமன்றி, பலாபலன், பொருத்தம், மற்றும் சர்வதேச பங்களிப்பு ஆகியவற்றையும் சார்ந்தது என்பது குறித்த எதிர்காலத்தை SLIIT தொடர்ந்தும் செதுக்கி வருகிறது. அதன் மாணவர்கள் உலகளாவிய கலந்துரையாடலில் வெறுமனே பங்குபற்றுவது மாத்திரமன்றி, அதனை வரையறுப்பதற்கும் உதவி வருகின்றனர். இளம் கட்டடக்கலைஞர்கள் தமது மகத்துவத்தை முன்னெடுக்க உதவி, எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் வெற்றியைக் கட்டியெழுப்ப உதவுவதில் இப்பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

SLIIT குறித்த விபரங்கள் 

இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிலையம் (Sri Lanka Institute of Information Technology -SLIIT) என்பது இலங்கையில் ஒரு முன்னணி, அரச சார்பற்ற, உயர் கல்வி நிலையமாகத் திகழ்ந்து வருவதுடன், 1999 ல் இது ஸ்தாபிக்கப்பட்டது. அதன் கல்வி மகத்துவம், ஆராய்ச்சி தலைமைத்துவம், மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக அங்கீகாரம் பெற்றுள்ள SLIIT, கணினி, பொறியியல், வணிகம், கட்டடக்கலை, மனிதாபினமானங்கள் மற்றும் விஞ்ஞானங்கள், கல்வி, மற்றும் சட்டம் உள்ளிட்ட விரிவான துறைகளில் கல்வியை வழங்கி வருகின்றது. தொழிற்துறை ஈடுபாடு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் வலுவான கவனத்துடன், கல்விரீதியாக முழுமை பெற்றவர்களாக மாத்திரமன்றி, நடைமுறைத் திறன்களையும் கொண்டவர்களாகவும், மிக வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற உலகில் வளம் காண்பதற்கான சிந்தனையைக் கொண்டவர்களாகவும் பட்டதாரிகளைத் தோற்றுவிப்பதில் SLIIT அர்ப்பணிப்புடன் உள்ளது. கல்வி ஒருமைப்பாடு, தலைமைத்துவ விருத்தி, மற்றும் தொடர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட கலாச்சாரம் ஆகியவற்றிலை முன்னிலைப்படுத்திய, வலுவான, மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சூழலை இக்கற்கைநிலையம் வளர்த்து வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title