Header Logo

செய்திகள்
பிரேமலாலின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு அனுமதி

Jul 31, 2025 - 06:24 PM -

0

பிரேமலாலின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு அனுமதி

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தையில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பேரணியின் போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, சாந்த தொடங்கொட என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு, குறித்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. 

இன்று மனுவைப் பரிசீலித்த பின்னர், நீதிபதிகள் ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ, மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 

பின்னர், மனுவின் விசாரணை 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட குற்றவாளிகளை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு தெரிவித்துள்ளது. 

அதன்படி, அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிகளுக்கு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என மேன்முறையீட்டில் கோரப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title