Header Logo
Mogo Academy

செய்திகள்
இலங்கைக்கான இந்தியாவின் முதல் தவணை நிதி விடுவிப்பு

Jul 31, 2025 - 08:20 PM -

0

இலங்கைக்கான இந்தியாவின் முதல் தவணை நிதி விடுவிப்பு
Mobitel inner

மஹவ - அநுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கத்தால் முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 770 மில்லியன் ரூபாய்) விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துரையாடி ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது. 

இந்தத் திட்டம் இந்திய அரச நிறுவனமான ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON International Limited) மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்திய உதவியுடன், வடக்கு மாகாண ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ரயில் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஒகஸ்ட் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

இதுவரை, இந்தியா சுமார் 500 கி.மீ ரயில் மார்க்கத்தை மறுசீரமைத்து மேம்படுத்தியுள்ளதுடன், சுமார் 330 கி.மீ ரயில் வலையமைப்பில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவியுள்ளது. 

இதன் மூலம் வடக்கு-தெற்கு இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்தியா பரந்த அளவிலான இயந்திரங்கள், டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMUகள்), மற்றும் பயணிகள் பெட்டிகளை வழங்கியுள்ளது. இது இலங்கை ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara