Sep 12, 2025 - 05:59 PM
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் திகதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும்.
வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும்.
சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பின்னர், இந்த வழக்கை வரும் 24-ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.



























