Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வில்லை

Sep 16, 2025 - 11:43 AM

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வில்லை
Mobitel Inner 1278

தற்போது, ​​பாராளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டப்படும்போது, ​​ஒலிவாங்கியைத் துண்டிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக, நானும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே எழுந்து நிற்கிறோம். இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில் அதைத் தடுப்பது, கருத்துகளை வெளியிடுவதற்கு தடங்கல் ஏற்படுத்துவது கீழ்த்தரமானதும் இழிவான செயலாகும். ஒலிவாங்கிகளை துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடைமுறை ரீதியான பதில்களை பெற்றுக் கொடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். தீர்வுகளை வழங்கும் யுகத்துக்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும், பொய்யான கதைகளை முன்வைக்கும் யுகமே தற்சமயம் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு நடைமுறை ரீதியிலான, நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும், ‘கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடு’ எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், நேற்று (15) அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்து காணப்படும் மதவாச்சி மற்றும் கெபிதிகொல்லாவ பிரதேச விவசாயக் குடியிருப்புகளை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இவ்வாறு பிரச்சினைகளை நாம் முன்வைப்பது அரசியல் நாடகமல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பதும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதுமாகும். 2020 முதலே நாம் இவ்வாறு பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறோம். ஆகவே இது ஓர் அரசியல் நாடகமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு நாடகங்களுக்கு மக்கள் சிக்கிக் கொண்டாலும், எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாடகங்களை நடத்தாது மக்களினது பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வில்லை. 

இன்று பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் எதுவும் இல்லை. ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். இளைஞர் யுவதிகள் கூட கைவிடப்பட்டுள்ளனர். யானை-மனித மோதலுக்கும் இதுவரை எந்த தீர்வுகளும் இல்லை. பயிர் சேதம், உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்களுக்கு முறையான காப்பீட்டுத் திட்டங்கள் எதுவும் இந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் மின்சார வேலிகள் அமைப்பதாகக் கூறிக்கொண்டவர்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி மோசமான நடிகர்களாக இன்று மாறியுள்ளனர். 

வாக்குறுதியளித்த உத்தரவாத விலையும் இன்று கிடைத்தபாடில்லை. நெல்லுக்கு சட்ட ஏற்பாடுகள் ரீதியாக பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்த உத்தரவாத விலை இன்று வரை கிடைக்கவில்லை. 

அரசாங்கத்திடம் இல்லாத தீர்வுகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகின்றன. 

இன்று, அரசாங்கம் பாரம்பரிய விவசாய உற்பத்திகளை கூட தடை செய்து, விவசாயிகளின் இடங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி கையகப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் படும் துன்பத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நியாயமான விலை கிடைக்காமையினால் அரிசி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாத நிலையில் உள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தியிடம் தீர்வுகள் உள்ளன. 

இலவச சுகாதாரம் என்பது பெயருக்கு மட்டுமே. ஏனைய சகல நடவடிக்கைகளும் பணம் செலவழித்தே செய்ய வேண்டியுள்ளது. 

சிறுநீரக நோய் கடுமையான பிரச்சினையாக காணப்படும் கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் அமைந்து காணப்படும் வைத்தியசாலையில் போதுமான டயாலிசிஸ் உபகரணங்கள் இல்லை. இவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடியாவிட்டால், நாம் இதற்காக நடவடிக்கை எடுப்போம். நாட்டில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இலவச சுகாதாரம் இருந்தபோதிலும், போதுமான மருந்துகள் இல்லை. இலவச சுகாதாரம் என்பது அடிப்படை மற்றும் மனித உரிமையாக காணப்படுவதனால், அது பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் பொய்களால் இனியும் நாம் ஏமாந்து விடக் கூடாது என தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278