Header Logo

செய்திகள்
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

Sep 17, 2025 - 01:04 PM -

0

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (18) அன்று 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

அதற்கமைய நாளை மறுதினம் முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். 

அதேநேரம் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும். 

இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title