Header Logo

வணிகம்
இலங்கையில் முதல்முறையாக நீலப் பிணைமுறியை (Blue Bond) விநியோகிக்கும் DFCC வங்கி, நிலைபேற்றியலுக்கு புதிய போக்கினை வகுக்கின்றது

Oct 2, 2025 - 06:51 PM -

0

இலங்கையில் முதல்முறையாக நீலப் பிணைமுறியை (Blue Bond) விநியோகிக்கும் DFCC வங்கி, நிலைபேற்றியலுக்கு புதிய போக்கினை வகுக்கின்றது

இலங்கையில் முதல்முறையாக நீலப் பிணைமுறியை அறிமுகப்படுத்தியுள்ள DFCC வங்கி, நாட்டின் மிகவும் முக்கியமான வளமான சமுத்திரத்தைப் பாதுகாத்து, நிலைபெறச் செய்வதற்கான செயற்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரூபா 3 பில்லியன் மதிப்புள்ள பிணைமுறிகளை விநியோகித்துள்ளது. 

இந்த முன்னோடி பிணைமுறியானது Fitch Ratings இடமிருந்து ‘A(EXP)(lka)’ தரப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுவதுடன், சுத்தமான குடிநீர் உட்கட்டமைப்பு, நிலைபேணத்தக்க சமுத்திர மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு, சமுத்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூழல்நேய கடலோர சுற்றுலாத்துறை, கழிவுநீர் முகாமைத்துவம், கடலோர சமூகங்களுக்கான காலநிலை தகவமைப்பு, தூய்மையான சமுத்திர போக்குவரத்து போன்ற செயற்திட்டங்களுக்கு உதவும். இது சர்வதேச மூலதனச் சந்தை சங்கத்தின் (International Capital Market Association - ICMA) சூழல் நேய, சமூக, மற்றும் நிலைபேற்றியல் பிணைமுறி கோட்பாடுகள் மற்றும் வெளிப்பாடு கண்டு வருகின்ற நீலப் பிணைமுறி வழிகாட்டல் விதிமுறைகளுக்கு இணங்குவதுடன், வெளிப்படைத்தன்மை, இதன் மூலம் திரட்டப்படுகின்ற நிதி எதற்காக பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்த தெளிவான வரையறை, மற்றும் கணிப்பிடக்கூடிய விளைவுகள் ஆகியன இதன் மையமாகவுள்ளன. 

இலங்கையைப் பொறுத்தவரையில் மொத்த சனத்தொகையில் சுமார் 30 சதவீதமானோர் கடலோர மாவட்டங்களில் வசிப்பதுடன், அவர்களுடைய ஜீவனோபாயங்கள் மீன்பிடி, சுற்றுலாத்துறை, மற்றும் வாணிபம் போன்ற செயல்பாடுகளுடன் பிணைந்துள்ள நிலையில், நீலப் பிணைமுறியானது மூலதன திரட்டல் என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு விடயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஜீவனோபாயங்கள், சூழல் கட்டமைப்புக்கள், மற்றும் நீண்ட கால நெகிழ்திறன் ஆகியவற்றைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் யதார்த்தங்களுடன் நிதிச் சந்தைகளை தொடர்புபடுத்துவதற்கான ஒரு அர்ப்பணிப்பாக இது காணப்படுகின்றது. 

நிலைபேணத்தக்க நிதி வழங்கல் மற்றும் தேசியத்திற்கு முன்னுரிமை ஆகியவற்றில் DFCC வங்கியின் பாரம்பரியத்தை அத்திவாரமாகக் கொண்டு இம்முயற்சி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 1996 ம் ஆண்டில் நாட்டில் முதன்முதல் தேசிய மினிவிநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மினி நீர் மின் செயற்திட்டத்திற்கு நிதி வசதி அளித்தமை முதலாக, காற்று, சூரிய மின்னுற்பத்தி, மற்றும் கழிவிலிருந்து எரிசக்தி மத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களுக்கு வங்கி துணைபுரிந்துள்ளது. 2024 ம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தை, லக்சம்பேர்க் பசுமை பங்குச் சந்தை (Luxembourg Green Exchange), மற்றும் இந்தியாவின் GIFT City இலுள்ள NSE International Exchange ஆகியவற்றில் நிரற்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது பசுமை பிணைமுறியை DFCC வங்கி விநியோகித்தது. அந்த வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு படியாக நீலப் பிணைமுறி அமைந்துள்ளதுடன், சமுத்திரங்களை நோக்கி நிதியியல் புத்தாக்கத்தை திசைதிருப்பி, நிலைபேற்றியலை மையமாகக் கொண்டு அபிவிருத்தியை முன்னெடுப்பதில் வங்கியின் 70 ஆண்டு கால வரலாற்றையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: “அதியுயர் சர்வதேச தராதரங்களை இலங்கையில் எட்ட முடியும் என்பதை ஒவ்வொரு படியும் நிரூபிக்கின்றது. அப்பயணத்தின் தொடர்ச்சியே நீலப் பிணைமுறி - இம்முறை 

எமது சமுத்திரங்கள், நீர்வழிகள், மற்றும் அவற்றை நம்பியுள்ள சமூகங்களை நோக்கி எமது கவனத்தை திருப்பியுள்ளோம். நிதி வசதி ஒரு தேசத்தின் போக்கினையே மாற்றும் வல்லமை படைத்தது. தனது முதலாவது நீலப் பிணைமுறியுடன், தனது சமுத்திரங்களின் போக்கினையும் மாற்ற முடியும் என்பதை DFCC வங்கி நிரூபிக்கின்றது.” 

சமுத்திர சூழல் கட்டமைப்புக்களைப் பாதுகாப்பதில் மூலதனச் சந்தைகளின் அனுகூலத்தைப் பயன்படுத்துகின்ற, சீஷெல்ஸ், பிஜி, இக்குவடோர், மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இணைந்து, வளர்ந்து வரும் சிறிய வட்டத்தில் இந்த விநியோகத்தினூடாக இலங்கையும் இணைந்துள்ளது. தற்போது தனது 70 வது ஆண்டில் பயணிக்கும் DFCC வங்கியைப் பொறுத்தவரை, அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆகியன போட்டிக்கான இலக்குகள் அல்லாது அதற்கு இணையான கட்டாயங்களாக உள்ளன என்பதை நீலப் பிணைமுறி அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இதன் உண்மையான சாதனை வரலாற்றை சந்தைகளோ அல்லது தரப்படுத்தல் அட்டவணைகளோ காண்பிக்க மாட்டாது என்பதுடன், தூய்மையான துறைமுகங்களைக் கொண்ட மீன்பிடிக் கிராமங்கள், காலநிலை ஆபத்துக்களுக்கு தம்மைத் தகவமைப்புச் செய்யும் கடலோர சமூகங்கள், பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் சுற்றுலாத்துறை செயல்பாட்டாளர்கள், மற்றும் பாதுகாப்பான குடிநீருக்கான வாய்ப்பைப் பெறும் குடும்பங்கள் மத்தியிலேயே இதன் உண்மையான மாற்றத்தின் விளைவை அறிந்து கொள்ள முடியும். 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 137 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title