Header Logo

வணிகம்
George Keyt அறக்கட்டளையின் ‘Young Contemporaries 2025’ வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் வெற்றியாளரையும் அறிவித்தது

Oct 2, 2025 - 07:02 PM -

0

George Keyt அறக்கட்டளையின் ‘Young Contemporaries 2025’ வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் வெற்றியாளரையும் அறிவித்தது

George Keyt அறக்கட்டளையின் ‘Young Contemporaries 2025’ கண்காட்சி அண்மையில் Barefoot Gallery இல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் முதல் நாள் மாலைப் பொழுதில் சுமார் 300க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல ஓவியங்கள் விற்பனையாகியது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரியு பெட்ரிக் இந்தக் கண்காட்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். நாடு முழுவதையும் சேர்ந்த 12 வளர்ந்து வரும் கலைஞர்களின் ஆக்க வெளிப்பாடுகளை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தியிருந்தது. 

நடுவர் குழுவினால் கவனமான மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து, ‘Young Contemporary 2025 விருது’, கிளிநொச்சியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய பொன்னையா பீற்றருக்கு வழங்கப்பட்டிருந்தது. யுத்த கால நினைவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்த இவரின் ஆக்கங்கள், அழுத்தம், மீட்சி மற்றும் சமாதானத்துக்கான தேடல் போன்ற மிகவும் பலம் வாய்ந்த உணர்வு வெளிப்பாடாக அமைந்திருந்தன. நிகழ்வின் அனுசரணையாளரான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்த குணதிலக இந்த விருதை வழங்கியிருந்தார். 

கலைஞர்களின் ஆக்கங்கள் மற்றும் சிறந்த தெரிவுகள் போன்றன லீனா ஹைட்ராமணி, அனோமா ராஜகருண, நெலுன் ஹரஸ்கம மற்றும் டொமினிக் சன்சொனி ஆகியோரினால் மதிப்பாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. 

George Keyt அறக்கட்டளையின் தவிசாளர் மாலக தல்வத்த குறிப்பிடுகையில், இந்த ஆண்டின் அமர்வு வெற்றிகரமானதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக பெருமளவு பொது மக்களின் வரவேற்பு மற்றும் இலங்கையின் கலையை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பதில் அறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சி போன்றன முக்கியத்துவம் பெறுவதாக கூறினார். வெற்றியாளரின் ஓவிய அம்சங்கள், George Keyt அறக்கட்டளையின் நோக்கங்களுக்கமைவானதாக காணப்படுவதுடன், ஆக்கத்திறனினூடாக, பலம் வாய்ந்த வெளிப்பாடுகளாக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title