செய்திகள்
சகல இனத்தவர்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும்!

Oct 10, 2025 - 08:12 PM -

0

சகல இனத்தவர்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும்!

இனங்கள், மதங்கள், சமூக பிரிவுகள் மற்றும் சாதிகளின் அடிப்படையில் செயல்படுவதை நான் எதிர்க்கிறேன். பிரதான அரசியல் கட்சிகள் இனம், மதம் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் மக்கள்தொகைப் பிரிவுகளின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை, பாரபட்சமற்ற தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

இனவாதம் மற்றும் மதவாதம் செயல்படாத சூழலை நாம் உருவாக்கினால், இந்த இனவாத மற்றும் மதவாத ரீதியான பிரச்சினைகள் எழாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதும் இனவாதம் அதிகரித்து காணப்பட்டன. அச்சமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளுக்காக யார் குரல் கொடுத்தார்கள் என்பது மக்களுக்குத் நன்கு தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 

அச்சமயம் இனவாதத்தை முன்னெடுத்தது பிரதான அரசியல் கட்சியாகும். பிரதான அரசியல் கட்சிகள் தீர்வுகளை வழங்காததாலயே, இந்தியாவில் பல்வேறு மக்கள்தொகைப் பிரிவுகளுக்கு ஏற்ப அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. இனம், மதம், சாதி, வர்க்கம் தராதரம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் கட்சிகள் அவசியமில்லை. 

என்றாலும், சகல இனத்தவர்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05