Oct 29, 2025 - 06:31 PM -
0
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அவர் இந்திய அரசின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதன்படி எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் 2 நாட்கள் தங்கியிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

