இந்தியா
இந்தியாவில் மற்றொரு கோர விபத்து - 17 பேர் பலி

Nov 3, 2025 - 10:28 AM -

0

இந்தியாவில் மற்றொரு கோர விபத்து - 17 பேர் பலி

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 

பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது லொறி ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. 

மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். 

இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது. 

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

அதேநேரம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05