செய்திகள்
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வர் கைது

Nov 4, 2025 - 05:49 PM -

0

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வர் கைது

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (04) கைது செய்துள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டில், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்குத் தேவையற்ற நேரத்தில், கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஒரு மணி நேரத்திற்கு 2,000 கிலோ மீன்களை வெற்றிடப் பொதி செய்யக்கூடிய உயர் திறன் கொண்ட மீன் பொதியிடல் இயந்திரத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் கொள்வனவு மூலம் அரசாங்கத்திற்கு 5,856,116 ரூபா இழப்பை ஏற்படுத்தி, ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இன்று பிற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டவர்கள்: 

*லலித் தவுலகல (கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்) 

*சந்தன கிரிஷாந்த (முகாமைத்துவப் பணிப்பாளர்) 

*விஜித் புஷ்பகுமார (வழங்கல் முகாமையாளர்) 

*அநுர சந்திரசேன பண்டார (செயற்பாட்டு முகாமையாளர்/பணிப்பாளர் - பதில் நிதி முகாமையாளர்) 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05