செய்திகள்
தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்

Nov 5, 2025 - 06:13 PM -

0

தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்

சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர். 

10 பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதுடன்,  ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 

 

மீட்கப்பட்டவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு சுற்றுலா சென்றவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிகையில் பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைத்துள்ளனர்.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05