செய்திகள்
இலங்கையில் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்த குழு

Nov 5, 2025 - 09:13 PM -

0

இலங்கையில் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்த குழு

நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச சட்டப் போக்குகளுக்கு இணங்க வலுப்படுத்துவதற்காக, அறிவுசார் சொத்துத் துறை, சட்டத்துறை மற்றும் பிற அமைச்சுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியவாறு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் வர்த்தக அமைச்சில் நடைபெற்றது. 

அதன்படி, இசைத்துறையின் பதிப்புரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, நேர்மறையான தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05