செய்திகள்
சந்தேகநபரை பிடிக்க சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி

Nov 25, 2025 - 01:25 PM -

0

சந்தேகநபரை பிடிக்க சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி

நிவித்திகலை, உடபேபொடுவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை தெல்வல பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதை இயக்க முயன்றுள்ளார். 

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காரின் மீது தொங்கிக் கொண்டு அதனை நிறுத்துவதற்கு முற்பட்ட போது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு காயமடைந்தவர் தெல்வல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது. 

காரை செலுத்திய நபர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று பொலிஸார் கண்டறிந்த பின்னர் அவரைச் சோதனையிட முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி காரின் மீது தொங்கியவாறு ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பின்னர் அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் கீழே விழுந்த நிலையில், காரை செலுத்திய நபர், வீதியோரத்தில் கரை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05