Dec 2, 2025 - 08:37 PM -
0
பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இச்சுற்றுப்பயணத்தில் 3 இருபதுக்கு 20 (T20) போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடரின் அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மூன்று டி-20 போட்டிகளும் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

