Header Logo
Mogo Academy

செய்திகள்
கலென்பிந்துனுவெவ சம்பவம் - 15 வயது மகளும் மரணம்!

Jan 10, 2026 - 04:45 PM -

0

கலென்பிந்துனுவெவ  சம்பவம் - 15 வயது மகளும் மரணம்!
Mobitel inner

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த சிறுமி இன்று (10) காலை உயிரிழந்துள்ளார். இவரது பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. 

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிக்காரமடுவ பிரதேசத்தில் கடந்த 06 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. 

தீ வைத்த 43 வயதான குடும்பத் தலைவரும், அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உயிரிழந்திருந்தனர். 

படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயதான மனைவியும் அன்றைய தினமே (06) உயிரிழந்திருந்தார். 

இதனையடுத்து, தற்போது 15 வயதுடைய மூத்த மகளும் உயிரிழந்ததை அடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர். 

இதேவேளை, தீ விபத்தில் சிக்கிய 20 வயதான மகனும், 66 வயதான மாமியாரும் தொடர்ந்தும் தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara