செய்திகள்
அக்குரேகொட இரட்டைப் படுகொலை: பொல்கஸ்ஸோவிட்ட டிலாவிற்கு 90 நாட்கள் தடுப்புக் காவல்

Feb 20, 2026 - 07:10 PM -

0

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: பொல்கஸ்ஸோவிட்ட டிலாவிற்கு 90 நாட்கள் தடுப்புக் காவல்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆயுதங்களைக் கொண்டு செல்ல உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 'பொல்கஸ்ஸோவிட்ட டிலா' என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு இன்று (20) அனுமதி பெற்றுள்ளது. 

28 வயதுடைய இவர், கடந்த 17ஆம் திகதி பிற்பகல் பொல்கஸ்ஸோவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

தலங்கம, அக்குரேகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். 

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. 

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல், கொலையாளிகளினால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு செல்ல உதவிய சகோதரர்கள் இருவர் கொட்டாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வௌிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். 

இவரது ஆலோசனையின் பேரிலேயே குறித்த இரு இளைஞர்களும் துப்பாக்கிகளைக் கொண்டு சென்றுள்ளமையும், இவரும் அந்த நடவடிக்கையில் இணைந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05