Feb 20, 2026 - 11:13 PM -
0
சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 6 ஆம் தரத்திற்கான ஆங்கிலப் பாடத் தொகுதியில் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

