Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: முடங்கியது டிஜிட்டல் சேவை!

Mar 3, 2026 - 05:14 PM

அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: முடங்கியது டிஜிட்டல் சேவை!
Mobitel Inner 1278

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இத்தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்கள் நேரடியாக சேதமடைந்துள்ளதுடன், பஹ்ரைனில் அமைந்துள்ள ஒரு மையமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த எதிர்பாராத சம்பவத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வங்கி நடவடிக்கைகள், இணையத்தளங்கள் மற்றும் பல கைப்பேசி செயலிகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மின்சார விநியோகம் தடைப்பட்டதால் தரவு செயலாக்க நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தீயணைப்பு அமைப்புகள் இயங்கியதன் காரணமாக, தொழில்நுட்ப உபகரணங்களுக்கு நீரினால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது. 

நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமது சேவைகளை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் உடனடியாக தமது தரவுகளை ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பாதுகாப்பான வலயங்களில் அமைந்துள்ள சேவையகங்களுக்கு மாற்றுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், அமீரகத்தின் பல முன்னணி வங்கிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்புகள் செயலிழந்துள்ள நிலையில், இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தரவு உட்கட்டமைப்பு மீது போர் தாக்குதல் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுவதுடன், இதன் காரணமாக பிராந்தியத்தின் டிஜிட்டல் ஸ்திரத்தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278