Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை

Mar 10, 2026 - 08:35 PM

 ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை
Mobitel Inner 1278

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா'  கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன் (அமெரிக்கா), இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278