Header Logo

செய்திகள்
பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தீப்பந்தப் போராட்டம்

Mar 10, 2026 - 11:19 PM -

0

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தீப்பந்தப் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் மகா மாணவர் சங்கத்தினால் இன்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி - கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியதால் அவ்விடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

"தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை 'பாலர் பாடசாலைகளாக'  கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று நிருபங்களை வெளியிட்டு மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்" என மாணவர் தலைவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களின் எழுச்சியையும் ஒற்றுமையையும் தடுப்பதற்காகவே இவ்வாறான சுற்று நிருபங்கள் மூலம் மாணவர் அடக்குமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title