May 24, 2026 - 06:52 PM -
0
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, மத்துகம, இங்குரிய, புளத்சிங்கள, அகலவத்தை, ஹொரண, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய,
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஎல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

