Header Logo

செய்திகள்
தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

May 24, 2026 - 07:40 PM -

0

தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். 

'X' தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி, பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், அந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து திறந்தவெளிகளை நோக்கி குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் விலகியிருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். 

இன்று பிறப்பிக்கப்பட்ட இது போன்ற இரண்டாவது கட்டாய வெளியேற்ற உத்தரவு இதுவாகும். 

இதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், அந்நாட்டின் தெற்கே உள்ள 10 கிராமங்களில் வசிக்கும் மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். 

இஸ்ரேலின் இந்த முதலாவது வெளியேற்ற உத்தரவுக்கு முன்னரும் பின்னரும் லெபனானின் சில பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title