Header Logo

செய்திகள்
சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Jun 9, 2026 - 10:25 AM -

0

சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.


இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

தீர்ப்பை அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடுகையில், பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். 

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன என வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கக் காரணமாக அமைகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

இந்தப் பிரதிவாதிக்குத் தண்டனை விதிக்கும் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இருப்பினும், இக்குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான தண்டனையொன்றை வழங்க நீதிமன்றம் விதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
அவசர கால நிலை அமுலில் இருப்பினும்  குற்றங்கள் குறையவில்லை

அவசர கால நிலை அமுலில் இருப்பினும் குற்றங்கள் குறையவில்லை

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

title