Jun 9, 2026 - 10:05 PM -
0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
சுரேஷ் சலேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக ரத்துச் செய்யுமாறு அந்த கடிதத்தின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுரேஷ் சலேயை தடுப்புக்காவலில் வைப்பது தொடர்பான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த மே 20 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதிமன்ற உத்தரவுக்கமைய தயாரிக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைத்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சட்ட வைத்திய அதிகாரியின் முடிவுகளின் மூலம், தடுப்புக்காவலில் இருந்தபோது தனது கணவர் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகள் தொடர்பாக அவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

