Jul 31, 2025 - 09:15 AM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று (30) மாலை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு பின்னர், கிரியைகள் மற்றும் தம்ப மண்டப பூஜைகள் இடம்பெற்றன.
எம் பெருமான் உள் வீதி வலம் வந்து, பின்னர் வெளி வீதியில் மயில் வாகனத்தில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
-யாழ். நிருபர் ரமணன்-

