Oct 9, 2026 - 06:20 PM

மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை அறிவிப்பை மேலும் நீடிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (09) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எச்சரிக்கை மட்டம் 2 - அவதானமாக இருங்கள்
கேகாலை மாவட்டம்: மாவனெல்லை, ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய
எச்சரிக்கை மட்டம் 1 - விழிப்புடன் இருங்கள்
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, ஹத்தரலியத்த
கேகாலை மாவட்டம்: தெஹிஓவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரகாபொல
குருணாகல் மாவட்டம்: அலவ்வ
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை


































