Oct 11, 2026 - 08:17 PM

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மாஸ் சதாகட் ஓட்டங்களைப் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் இலங்கை அணி 216 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது.
இந்தப் போட்டிக்காக இலங்கை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், சினேத் ஜெயவர்தன, சமிந்து விக்ரமசிங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய முதலாவது போட்டியில் விளையாடிய கமில் மிஷார, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியும் ஒரு மாற்றத்தைச் செய்து, ரசௌல்லாவுக்குப் பதிலாக சல்மான் மிர்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


































