Oct 22, 2026 - 01:14 PM

ஆர்பிகோ மெட்ரஸ், தனது வருடாந்த ஆர்பிகோ மெட்ரஸ் சாதனையாளர் இரவு 2026 நிகழ்வை அண்மையில் கொழும்பு ITC ரட்னதீப ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள், வியாபாரங்கள் மற்றும் கம்பனி ஊழியர்களுடன் சிறந்த பகிரப்பட்ட சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Foam பிரிவில் ஆர்பிகோ நிகழ்வு நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருப்பதுடன், விற்பனையில் சிறந்த சாதனைகளை பதிவு செய்திருந்தமைக்காக வெகுமதிகளை வழங்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் விற்பனை பங்காளர்களின் சாதனைமிகுந்த பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், அவர்களின் சாதனைகளை கௌரவித்து சர்வதேச சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
பிளாட்டினம் பிரிவில் வெற்றியீட்டியவர்களுக்கு சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி, மற்றும் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான சுற்றுலா வாய்ப்பு வழங்கப்பட்டது. தங்கப் பிரிவில் வெற்றியீட்டியவர்களுக்கு அசர்பைஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான சுற்றுலா வாய்ப்பும், வெள்ளிப் பிரிவின் வெற்றியாளர்களுக்கு துபாய் மற்றும் அபு தாபி சுற்றுலாவும், சிலருக்கு பாலி சுற்றுலாவும் வழங்கப்பட்டது. வெண்கல பிரிவின் வெற்றியாளர்களுக்கு மலேசியா மற்றும் சிலவருக்கு பாங்கொக்/பத்தாயா ஆகிய பகுதிகளுக்கான சுற்றுலா வாய்ப்பும் வழங்கப்பட்டது.
உற்பத்தி, நவீன வர்த்தகம், விற்பனை மற்றும் விநியோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் ரொக்கப் பரிசுகள் மற்றும் சுற்றுலாச் சலுகைப் பொதிகள் வழங்கப்பட்டு, நிறுவனத்தின் முக்கிய வணிகத் துறைகளில் அதிகாரிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டது. நிகழ்வின் விசேட உரையாற்றிய ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ஷிரோன் குணரட்ன குறிப்பிடுகையில், வணிகம் முழுவதும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஆற்றல்மிகு சிறப்பின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஆர்பிகோ மெத்தை (Arpico Mattress) வர்த்தக நாமத்தின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யும் மனிதர்களையும் பங்கான்மைகளையும் கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்ட அந்த மாலைப் பொழுதிற்கு அவரது உரை மேலதிக ஊக்கமளிப்பதாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் ஃபோம் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், மாறிவரும் சந்தைச்சூழலில் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் நிலையான வளர்ச்சியைப் பேணவதற்கும் வலுவான மற்றும் அர்ப்பணிப்புமிக்க வலையமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இத்துறையின் செயல்திறன் குறித்த கருத்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேலும், ரிச்சர்ட் பீரிஸ் அண்ட் கம்பனி பிஎல்சி நிறுவனத்தின் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சேன யத்தெஹிகேயின் ஆதரவுக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இவரது வழிகாட்டலானது இத்துறையின் வளர்ச்சிக்கும் எதிர்கால இலக்குகளுக்கும் தொடர்ந்து வலுவான அடித்தளத்தை வழங்கி வருகின்றது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் “சாதனையாளர் இரவு” நிகழ்வு, விநியோகஸ்தர்களுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கை முழுவதும் உள்ள நுகர்வோருக்குத் தனது தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் ஆர்பிகோ மெத்தை நிறுவனம் காண்பிக்கும் தொடர்ச்சியான முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களைக் கௌரவிப்பதன் மூலம், தனது வணிகப் பங்காளர்களுடன் இணைந்து பரஸ்பர நன்மைகளை உருவாக்குவதற்கும், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களை அங்கீகரிப்பதற்குமான அர்ப்பணிப்பை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
ஆர்பிகோ நிறுவனத்தின் வணிகப் பங்காண்மை அணுகுமுறை, அதன் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய அங்கமாகத் தொடர்ந்து விளங்குவதுடன், சந்தையில் வர்த்தக நாமத்தின் இருப்பை வலுப்படுத்தும் உறவுகளை ஆழப்படுத்துவதுடன், சாதனைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் சாதனையாளர் இரவு வழங்குகின்றது. 2026 ஆம் ஆண்டிற்கான பதிவானது, செயல்திறன் மற்றும் ஆற்றல்மிகு சிறப்பிற்கான தமது கூட்டு அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், நிறுவனத்தையும் அதன் விநியோக வலையமைப்பையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.
பொலியுர்தீன் ஃபோம் மற்றும் ஸ்பிரிங் மெத்தைகள், ஷீட்கள், குஷன்கள் மற்றும் சிலிக்கன் ஃபைபர் தலையணைகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட், பல தசாப்த கால கூட்டாண்மை அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளது. பெருமைக்குரிய ISO 9001-2015 நியமத்தை பெற்றுள்ளதுடன், தனது புகழ்பெற்ற ஆர்பிபோமுக்காக SLS நியமத்தை ஆர்பிகோ பின்பற்றுகின்றது.
நம்பிக்கையை வென்ற நாமமாக ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட் திகழ்வதுடன், தனது தற்போதைய தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியிடமிருந்து ஒன்பது தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 28000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு, இலங்கையின் சிறந்த பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்களில் ஒன்றாக திகழ்வதுடன், விற்பனைகள், பெருந்தோட்டங்கள், இறப்பர், தளபாடங்கள், டயர்கள், பிளாஸ்ரிக், காப்புறுதி, பங்கு முகவராண்மை, நிதிச் சேவைகள் மற்றும் சரக்குக் கையாளல் போன்ற துறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. பெருமளவு வருடாந்த புரள்வைப் பதிவு செய்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
































