Oct 22, 2026 - 01:25 PM

Global Finance World’s Best Digital Bank & AI in Finance Awards 2026 விருது விழாவில் மூன்று மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரங்களை வென்றதன் மூலம் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கிப் புதுமையாளர் என்பதை மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் Raffles Hotel இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ‘Best Consumer Digital Bank’ ‘Best Mobile Banking App’ மற்றும் ‘Most Innovative Digital Bank’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள நிதி நிறுவனங்களின் டிஜிட்டல் வங்கியியல் சிறப்பம்சங்களைக் கௌரவிக்கும் இவ்விருதுகள், தொழில்நுட்பத்தால் இயங்கும் வங்கித் துறையில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுக்கு இணையான இடத்தில் கொமர்ஷல் வங்கியை நிலைநிறுத்தியுள்ளன.
இவ்விருது விழாவில் கொமர்ஷல் வங்கியின் சார்பில், பிரதம டிஜிட்டல் அதிகாரி திரு. ரண்டில் பொத்தேஜு, டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் முகாமையாளர் திரு. ரமேந்திர நோனிஸ் மற்றும் IT R&D பிரிவின் சிரேஷ்ட பொறியியல் முகாமையாளர் திருமதி நதிகா நாகஹவத்தே ஆகியோர் கலந்துகொண்டனர்.
வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுக்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் மாற்றம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் வங்கி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீடுகளையே Global Finance அமைப்பின் இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. மேலும், வங்கித் தொழில்நுட்பம், செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் உலகளாவிய தரநிலைகளை எட்டுவதில் வங்கியின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் ஆற்றலை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி பெற்றுள்ள இந்த அங்கீகாரமானது, இலங்கையின் டிஜிட்டல் வங்கித் திறன்களை ஒரு சர்வதேச
தளத்தில் உயர்த்தியுள்ளது. இதே விழாவில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட DBS Bank ‘World’s Best Digital Bank’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, இந்நிகழ்ச்சித் திட்டத்தால் அங்கீகரிக்கப்படும் நிறுவனங்களின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்துகிறது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக்
கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது.
Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி
இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































