Oct 22, 2026 - 01:34 PM

இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி
வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD நிறுவனம், அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட
விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன்படி, BYD கண்டி காட்சியறை 1,000 வாகன விநியோகங்களையும் மற்றும் BYD கண்டி சேவை நிலையத்தின் 1,000 வாகன பராமரிப்பு சேவைகளையும் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய சாதனையை எட்டிய ஒரே வாகன வர்த்தக நாமம் BYD என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் John Keells CG Auto நிறுவனத்தின் சிறந்த
விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளின் காரணமாக, இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து
வரும் புதிய சக்தி வாகன வர்த்தக நாமமாக BYD தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருவதை
இந்த வரலாற்று மைல்கல் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
































