Oct 26, 2026 - 06:50 PM

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பாடசாலைகளின் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாவுக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் பாடசாலைக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள அவரை சென்னை பொலிஸ் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2 ஆவது தளத்தில் அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றில் அன்பில் மகேஷ்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரித்துக்கொண்டே காரில் ஏறி பொலிஸ் நிலையம் சென்றார். 2021 - 26 வரை திமுக ஆட்சியில் பாடசாலைக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

































