Nov 16, 2026 - 07:19 PM

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை ஆகியவற்றை பிரெய்லி (Braille) முறையில் தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கை ஊடாக, இந்நாட்டின் கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வகிபாகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை தொடர்பில் அடிப்படை அறிவையும் புரிதலையும் பெற்றுக்கொள்வதற்கான பின்னணி உருவாக்கப்படும்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாக நாட்டின் அனைத்துக் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
எந்தவொரு குழந்தையையும் தவறவிடாமல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் தகவல்களை எளிதில் அணுகும் வாய்ப்பினை ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதிசெய்வது அமைச்சின் முதன்மையான எதிர்பார்ப்பாகும்.

































