Nov 17, 2026 - 05:36 AM

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.
எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

































