வணிகம்
உங்களது ஸ்மார்ட் செலவீனங்களிற்கான நுழைவாயில்

Oct 21, 2024 - 04:19 PM -

0

உங்களது ஸ்மார்ட் செலவீனங்களிற்கான நுழைவாயில்

NDB வங்கியானது விடுமுறை காலம் நெருங்க கொடுப்பதன் சாரம் காற்றில் கலந்திருக்க, உங்களது பணப்பையிலிருந்து மெல்லியதாகவும் ஆனால் உங்களது பெரிய கொள்வனவுகளை இலகுவாக்கவும் உறுதியளிக்கின்ற ஒரு சிறப்பு ஊக்குவிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில், பரந்த அளவிலான அத்தியாவசிய மற்றும் உற்சாகமான கொள்வனவுகளிற்கு NDB கடனட்டையாளர்கள் 36 மாதங்கள் வரை 0% வட்டித் தவணைகளை அனுபவிக்க முடியும்.

அதிநவீன வீட்டுபகரணங்களைக் கொண்டு உங்கள் வீட்டை மேம்படுத்த விரும்பினாலுஞ்சரி, விமான டிக்கெட்டுகள் மற்றும் பயணப் பொதிகளுடன் உங்களின் அடுத்த கனவு விடுமுறையைத் திட்டமிட்டாலோ அல்லது உங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவரின் கல்வியில் முதலீடு செய்ய விரும்பினாலுஞ்சரி, NDB உங்களுக்கு உதவி அளிக்க காத்திருக்கிறது. குறைந்தபட்ச பெறுமதி 100,000 இலங்கை ரூபாவாகவும் அதிக பட்ச தொகை 2 மில்லியன் ரூபாவாகவும் காணப்படும் பரிவர்த்தனையில் வட்டியைப் பற்றி கவலைப்படாமல் காலப்போக்கில் அந்த பெரிய கொள்வனவுகளுக்கான விலையை செலுத்தும் சுதந்திரத்தை இந்த சலுகை வழங்குகிறது.

சேர்க்கப்பட்ட வட்டி ஏதுமின்றி உங்களது கொடுப்பனவுகளை விரிவாக்கும் சௌகரியங்களை அனுபவித்துக்கொண்டே புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வது , நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட குடும்ப விடுமுறைக்கு முன்பதிவு செய்வது அல்லது உயர்மட்ட கல்வி பயிற்சி நெறியில் இணைவதனை சிறிது கற்பனை செய்து பாருங்கள். இப்பிரத்தியேக NDB சலுகையானது, இந்த பண்டிகைக் காலத்தில் உங்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை அளித்து, ஸ்மார்ட் ஷொப்பிங் செய்யவதற்கான வாய்ப்பினையும் உங்களுக்கு அளிக்கிறது.

உங்கள் வரவு செலவு திட்டத்தை எளிதாக முகாமைத்துவம் செய்துக்கொண்டே நீங்கள் விரும்பும் பயணத்திலிருந்து கல்வி மற்றும் வீட்டு மேம்படுத்தல்கள் வரையிலான விடயங்களை அனுபவிப்பதை NDB கடனட்டைகள் முன்னெப்பொதையும் விட மிகவும் எளிதாக்குகின்றன. எனவே ஏன் காத்திருக்க வேண்டும்? எங்களின் 0% வட்டி தவணை திட்ட சலுகை மூலம் மன அமைதியுடன், உங்கள் கனவுகளை இன்றே நனவாக்கத் தொடங்குங்கள் ஸ்மார்ட் செலவீனங்கள் சௌகரியத்தினை நிவர்த்திக்கும் NDB கடனட்டைகளுடன் உங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் இந்நம்பமுடியாத சலுகைகளை தவறவிட்டுவிடாதீர்கள்.

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05