Oct 22, 2024 - 11:20 AM -
0
ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் உள்நாட்டு ஆயுள் காப்புறுதித் துறையில் புகழ் பெற்ற மிகப்பெரிய திட்டமான 'ஃபெமிலி சவாரி' மெகா ஊக்குவிப்புத் திட்டத்தின் 18 ஆவது திட்ட நிகழ்வினை அறிவித்துள்ள நிலையில் அதன் மூலம் காப்புறுதிதாரர்களுக்கு பயண அனுபவங்கள வழங்கப்படவுள்ளன.
2025 ஆம் ஆண்டில் 15 காப்புறுதியாளர் குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்கு அனைத்து செலவினங்களுடனும் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பினை வழங்கவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க ஐந்து குடும்பங்கள் சீனாவிற்கும் மேலும் 10 குடும்பங்கள் மலேசியாவிற்கும் உல்லாச சுற்றுலா செல்லும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனைத் தவிர மேலும் 250 காப்புறுதியாளர் குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் பண்டாரகமவில் உள்ள பேர்ல் பே வாட்டர் பாக் ஒரு தினத்தினை மகிழ்ச்சியாக கழிக்கும் வாய்ப்பினை பெறவுள்ளனர்.
எப்போதும் ஃபெமிலி சவாரி ஊக்குவிப்பின் நோக்கமானது காப்புறுதியாளர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்நாள் முழுவதும் நினைவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வெகுமதியாக வழங்குவதாக உள்ளது என்று செலிங்கோ லைஃப்பின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு சமிதா ஹேமச்சந்திர தெரிவித்தார். எங்கள் காப்புறுதியாளர்கள் பல ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான பயண இடங்களை அனுபவிக்கும் இனிய தருணங்களை எம்மால் வழங்க முடிந்தது. எனவே 2025 ஆம் ஆண்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க மாட்டாது.
2025 ஜனவரியில் நடைபெறவுள்ள மாபெரும் குலுக்கல் சீட்டிழுப்பின் மூலம் 'ஃபெமிலி சவாரி 18'க்கு மொத்தமாக 265 காப்புறுதியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன் மூலம் குடும்ப அங்கத்தவர்களையும் இணைத்து 1060 பேர் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணங்கள் மற்றும் உல்லாச சுற்றுலாக்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை பெறுவர். இந்த பாரிய ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இன்றுவரை 36,000 பேருக்கு மேல் இந்த வெகுமதியைப் பெற்றுள்ளனர்.
ஃபெமிலி சவாரி சீட்டிழுப்பில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு உல்லாசப் பயண வெகுமதிகளை பெறுவதற்கு செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் நிறுவனத்திடம் ஏற்கனவே உள்ள தமது காப்புறுதியை தொடர வேண்டும் அல்லது பிரசார காலப்பகுதியான - செப்டம்பர் 1 முதல் 31 டிசம்பர் 2024 வரை தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் குறிப்பிட்ட குறைந்த பட்ச கணக்கு மீதியை பேண வேண்டும். மேலும் பிரசார காலப்பகுதியில் ஆயுள் காப்புறுதியில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் சீட்டிழுப்பில் இணைவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாத காப்புறுதி கட்டுப்பணத்தை செலுத்தியிருக்க வேண்டும்.
Ceylife டிஜிட்டல் செயலியைப் (App) பதிவிறக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வெற்றி வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் அவர்கள் செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர்களாக இருந்த காலத்திற்கு ஏற்றவாறு மேலதிக வாய்ப்புகள் ஒதுக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஃபெமிலி சவாரி திட்டங்களில் பரிசு பெற்ற குடும்பங்கள் அவுஸ்திரேலியா இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி சுவிட்சர்லாந்து ஜப்பான் பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளன மற்ற வெற்றியாளர்கள் சீனா துபாய் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.
ஃபெமிலி சவாரி விளம்பரமானது அதன் பிரபல வர்த்தகநாம தூதர்களாக நடிகர் ரோஷன் ரணவன மற்றும் அவரது மனைவி குஷ்லானி ஆகியோர் செயற்படுகின்றனர்.
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 36 வருடங்களில் 20 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.