Dec 27, 2024 - 05:17 PM -
0
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த தேசிய விற்பனை விருதுகள் (NSA) 2024 இல் NDB வங்கி ஒரு முக்கியமானபல விருதுகளை வென்று சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு விழாவில் வங்கியின் விற்பனைக் குழுவானது தனது சிறப்புமிக்க செயல்திறன்களுக்காக, எட்டு விருதுகளைப் பெற்றது.
இந்த மாலை நிகழ்வின் சிறப்பம்சமாக கசுன் ஜெயவர்தன, ஒட்டுமொத்த தேசிய விற்பனை முகாமையாளருக்கான தங்க விருதை வென்றார், இந்த விருதானது அவரது தலைமைத்துவத்தையும் விற்பனைச் செயல்பாட்டிற்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. முன்னணி வரிசை வங்கியியல் பிரிவில், நேத்மி குமாரிஹாமி தங்க விருதை பெற்றார்.
அதே வேளை கவீச வீரரத்ன வெள்ளி விருதைப் பெற்றார், இவ்விருதுகள் வங்கியியல் நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று சிறப்பான சேவையை வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. NDB இன் வெற்றியை மேலும் மேம்படுத்தும் வகையில், விற்பனை மேற்பார்வையாளர் வங்கியியல் பிரிவில் இரேஷா ஜயசிங்க தங்க விருதுடன் கௌரவிக்கப்பட்டார், அதே நேரத்தில் சிறந்த செயல்திறன் மற்றும் குழு தலைமைத்துவத்திற்காக எஸ்.வசந்தன் அதே பிரிவில் வெண்கல விருதைப் பெற்றார். சம்மில்பண்டார பிராந்திய முகாமையாளர் வங்கியியல் பிரிவில் சிறந்து விளங்கிய நிலையில் பிராந்திய விற்பனை முகாமைத்துவத்தில் தனது நிபுணத்துவம் மற்றும் மூலோபாய புத்திசாலித்தனத்திற்காக தங்க விருதைப் பெற்றார்.
வங்கியின் பாராட்டுக்களுடன் சேர்த்து, நிரோஷன் கமகே விற்பனை நிறைவேற்று வங்கியியல் பிரிவில் மெரிட் விருதைப் பெற்றார், மேலும் பிரவீன் செனவிரத்ன பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான வெண்கல விருதைப் பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து பேசிய NDB இன் விற்பனை பிரிவின் உதவி உப தலைவர் சமீர செனரத், அணியின் தொடர்ச்சியான வெற்றி தொடர்பாக தனது பெருமையை வெளிப்படுத்தினார், “இந்த விருதுகள் எங்களின் விதிவிலக்கான விற்பனைத் திறமையை மேம்படுத்துவதற்கும் அங்கீகரிப்பதற்கும் NDB இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. எங்கள் குழு உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்படும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு எங்கள் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையைத் தூண்டுவதுடன் மற்றும் வங்கித் துறையில் முன்னணியில் திகழ்வதற்கு எங்களை முன்னோக்கி நகர்த்துகிறது.
தேசிய விற்பனை விருதுகள் (NSA), தற்போது அதன் 22வது ஆண்டில் காலடி பதித்துள்ள நிலையில் சிறந்த செயல்திறன் கொண்ட விற்பனை நிபுணர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கான இலங்கையின் முதன்மையான தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. SLIM ஆல் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த இந்த கௌரவத்திற்குரிய நிகழ்வானது , விற்பனையில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்கும் அதே வேளையில், அவர்களின் நிறுவனங்களுக்குள்சிறந்த சேவையையும் செயல்திறன்களையும் வழங்கும் ஊழியர்களை கௌரவிக்கின்றது.
NSA 2024 விருது நிகழ்வில் NDB வங்கியின் சிறப்பான செயல்திறனானது சிறந்து விளங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றின் தெளிவான பிரதிபலிப்பாகும். வளர்ச்சி, புதுமை மற்றும் இணையற்ற சேவை வழங்கல் ஆகியவற்றின் எதிர்காலத்தை உறுதிசெய்து, அதன் ஊழியர்களை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை தரத்தை உயர்த்துவதற்கும் தேவையான நோக்கத்தை அடைவதில் வங்கி உறுதியாக உள்ளது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.