பல்சுவை
ரயில் நிலையத்தில் காதல் ஜோடி முத்தமழை

Dec 31, 2024 - 12:39 PM -

0

ரயில் நிலையத்தில் காதல் ஜோடி முத்தமழை

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி. நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து இருந்தனர்.

 

அப்போது இளம் காதல் ஜோடி ஒன்று ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் நிலையத்தில் இருந்த மேடையில் அமர்ந்து காதல் ஜோடி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மெய் மறந்து முத்த மழை பொழிந்தனர்.

 

மற்றவர்கள் தங்களைப் பார்க்கிறார்கள் என்பதை காதல் ஜோடி பொருட்படுத்த வில்லை. இதனைக் கண்ட பயணிகள் முகம் சுளித்தபடி சென்றனர்.

 

ஒரு சில பயணிகள் காதல் ஜோடியின் சேட்டையை தங்களது தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகள் இது போன்ற அநாகரிமான செயல்களை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05