Jan 8, 2025 - 02:48 PM -
0
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது நியூசிலாந்தின் ஹெமில்டன் மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதோடு, 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களையும் மார்க் செப்மன் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தி 4 விக்கட்டுக்களை கைப்பற்றியதோடு, வனிந்து ஹசரங்க 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், 37 ஓவர்களில் 256 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 30.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் Will O’Rourke 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் ஊடாக ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், நியூசிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.