Jan 19, 2025 - 07:36 PM -
0
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில், பந்துவீசும் போது ஏற்பட்ட முழங்கை காயம் காரணமாக அவரது இலங்கை சுற்றுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் தனது இரண்டாவது குழந்தை பிறப்பு மற்றும் கணுக்கால் காயம் காரணமாக இலங்கை சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார்.
இதன் காரணமாக ஸ்மித் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பதில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.