வணிகம்
விதிவிலக்கான திறமை மற்றும் அறிவை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Brain Busters with SLIIT’ இன் நான்காவது சீசனை முடிவுக்குக் கொண்டுவந்த SLIIT

Jan 20, 2025 - 06:06 AM -

0

 விதிவிலக்கான திறமை மற்றும் அறிவை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Brain Busters with SLIIT’ இன் நான்காவது சீசனை முடிவுக்குக் கொண்டுவந்த SLIIT

நாடு முழுவதிலுமுள்ள பிரகாசமான இளம் இதயங்களை சவாலுக்கு உட்படுத்தவும், அவர்களை ஈர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ‘Brain Busters with SLIIT’ இன் நான்காவது சீசனை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதை அறிவிப்பதில் SLIIT பெருமையடைகின்றது. மிகவும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த இறுதிப் போட்டி இரத்மலானையில் உள்ள ஸ்டெயின் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப 6.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தொலைக்காட்சி TV1 அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இந்தப் போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் பாடசாலைகளின் சிறப்பான திறமை, குழுச் செயற்பாட்டுக்கான சான்றாக இது அமைந்துள்ளது.

விறுப்பாக நடைபெற்ற போட்டியில் காலி ரிச்மன்ட் கல்லூரி சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டு, வெற்றிக் கிண்ணத்தையும் தமது பாடசாலைக்காக 300,000 ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்டது. இந்தப் பாடசாலை அணியின் உறுப்பினர்களான மனுக ரிசன், ரூபசிங்க விஹங்க தத்சரா ஆகியோர் தமது விதிவிலக்கான அறிவுத்திறன் மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படுத்தியதுடன், இது அவர்களுக்குப் பரிசைப் பெற்றுக்கொடுத்தது.

கொழும்பு ரோயல் கல்லூரி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதன் உறுப்பினர்களான கல்யா மேதானந்த மற்றும் விருல லியனகே ஆகியோர் வெளிப்படுத்திய சிறப்பான ஆற்றல் பாடசாலையை சிறந்த இடத்திற்குக் கொண்டுசென்றதுடன், இதன் மூலம் 150,000 ரூபா பணப்பரிசை அவர்களால் வெற்றிகொள்ள முடிந்தது.

மூன்றாவது இடத்தை மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி பெற்றுக்கொண்டது. இந்தக் கல்லூரி அணியின் உறுப்பினர்களான அமயூர ஷேனல் பட்டபெந்தி மற்றும் சசிந்து சத்மல் ஆகியோர் பாடசாலைக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி 75,000 ரூபா பணப் பரிசையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட முதல் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற 5,000ற்கும் அதிகமான மாணவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கான மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதிக புள்ளிகளைப் பெற்ற 27 பாடசாலைகளிலிருந்தான மாணவர்கள் தொலைக்காட்சி சுற்றுக்காகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இதில் ஒரு பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா இருவரைக் கொண்ட அணி கலந்துகொண்டது. தொலைக்காட்சி சுற்றுக்கு முன்னேறிய 54 மாணவர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் பணப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டதுடன், ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றியாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் போட்டியில் பங்குபற்றிய 5,000 பேருக்கும் பங்குபற்றலுக்கான சான்றிதழ்கள் கிடைத்ததுடன், ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பொறுப்பாசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான பணியைப் பாராட்டியும் அதனை அங்கீகரித்தும் விசேட பரிசுகள் வழங்கப்பட்டன.

SLIIT இன் துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே, SLIIT இன் வேந்தரும், தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, பிரதி துணை வேந்தர் (ஆய்வு மற்றும் சர்வதேசம்) பேராசிரியர் சமந்த தெளிஜ்ஜகொட மற்றும் இன் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளைக் கொண்டாடியிருந்தனர்.

SLIIT வணிகப் பிரிவின் தகவல் முகாமைத்துவத் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் ருவன் ஜயதிலக, SLIIT இன் ஆய்வு மற்றும் சர்வதேசத் தொடர்புகளுக்கான பணிப்பாளரும், ‘Brain Busters with SLIIT நிழ்ச்சியின் தலைவருமான அசங்கி ஜயசிங்க, கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.ரி.சி.முதுனாயக்க ஆகியோர் இறுதிப் போட்டியின் நடுவர்களாகப் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில் வெற்றிக்கிண்ணத்தைக் கையளித்தபோது இன் உப வேந்தர் பேராசிரியர் லலித் கமகே உற்சாகமான பேச்சொன்றை நிகழ்த்தியிருந்தார். மாணவராக இருந்து முன்னணி கல்வியியலாளரகாவும், உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் நிறுவுனராகவும் மாறும் வரையிலான தனது பயணத்தை அவர் பகிர்ந்துகொண்டார். வெற்றியை அடைவதில் நம்பிக்கை, எதிர்வினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பங்குபற்றிய அணிகளின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், அவர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்புக்கு இதயபூர்வமான நன்றிகள்.

எதிர்காலத்தின் தலைவர்களாகவிருக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவது மற்றும் அவர்களை உக்குவிக்கும் நோக்கில் SLIIT இன் ஆய்வு மற்றும் சர்வதேசத் தொடர்புகளுக்கான பணிப்பாளரும், ‘Brain Busters with SLIIT நிழ்ச்சியின் தலைவருமான அசங்கி ஜயசிங்க அவர்களினால் 2018ஆம் ஆண்டு ‘Brain Busters with SLIIT’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அவர் குறிப்பிடுகையில், “இந்தத் திட்டம் ஒரு வினாடி வினாப் போட்டி என்பதற்கு அப்பால், மாணவர்களின் சிறந்த வெளிப்பாட்டுக்கான ஊக்குவிப்பாகவும், அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் வெற்றிபெற அவர்களுக்கு ஊட்டமளிக்கும் அமர்வுகளையும் இது ஒருங்கிணைக்கின்றது” என்றார். கடந்த சில வருடங்களாக இலங்கை மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருக்கும் SLIIT இன் கூட்டிணைந்த சமூகப்பொறுப்பின் முக்கிய அம்சமாக இத்திட்டம் அமைந்துள்ளது. பங்குபற்றுபவர்கள் உயர்ந்த இடத்திற்குச் செல்வதற்கான ஊக்குவிப்பை வழங்கும் அதேநேரம், இங்கையின் வெற்றிக் கதையை உலகளாவிய தளத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு போட்டி நிகழ்வாகவும் இது மாறியுள்ளது. பாடசாலைகளில் நடத்தப்படும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் திறனைச் சோதிப்பது மாத்திரமன்றி, ஊக்குவிப்பு மற்றும் தொழில்முனைவு அமர்வுகளையும் உள்ளடக்கியது.

தொலைக்காட்சி சுற்றின் போது மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலும், தமது சிறந்த எதிர்காலத்தைக் கொண்டவர்களாக வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் SLIIT இன் முன்னணி பேராசிரியரகளால் ஊக்கமளிக்கும் அமர்வுகள் முன்னெடுக்கப்படும்.

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025இற்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் மத்தியில் 3வது இடத்தைப் பிடித்துள்ள SLIIT, அரசசார்பற்ற பல்கலைக்கழகங்களில் முதல்தரப் பல்கலைக்கழகமாக வளர்ச்சிபெற்றுள்ளது. 25 வருட சிறப்பைக் கொண்டாடும் இந்த நிறுவனம் 25,00ற்கும் அதிகமான பட்டதாரி மாணவர்களைத் தற்பொழுது கொண்டிருப்பதுடன், பல்வேறு துறைகளில் 40,000ற்கும் அதிகமான பழைய மாணவர்களின் இணைப்பைக் கொண்டுள்ளது.

‘Brain Busters with SLIIT’ இன் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்படும். நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகள் இதில் பங்கெடுத்து தமது திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. அடுத்த சீசனில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள விரும்பும் பாடசாலைகள் SLIIT இன் ஆய்வு மற்றும் சர்வதேசத் தொடர்புகளுக்கான பணிப்பாளர் அசங்கி ஜயசிங்க அவர்களை asangi.j@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்புகொள்ளவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05