விளையாட்டு
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

Jan 21, 2025 - 12:53 PM -

0

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கோலாலம்பூரில் இன்று (21) இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 81 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


பின்னர், 167 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.


இந்த வெற்றியின் ஊடாக குழு A புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05