விளையாட்டு
தந்தையின் சாதனையை முறியடித்த மகன்

Jan 25, 2025 - 09:41 AM -

0

தந்தையின் சாதனையை முறியடித்த மகன்

இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், அவுஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.

 

அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 பெற்றது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப். நிதானமாக ஆடி சதமடித்தார்.

 

ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 

ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.

Comments
0

MOST READ