மலையகம்
கண்டியில் இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம்

Jan 26, 2025 - 10:42 AM -

0

கண்டியில் இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) நடைபெற்றது.

 

76 ஆவது குடியரசு தினத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டடம் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

 

மேலும், இந்நிகழ்வுக்கு மலையகத்தில் வாழும் இந்திய குடும்பங்கள் உட்பட அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் பிரதிநிதிகள் மற்றும் அனுநாயக்கத் தேரர்கள், இந்து, இஸ்லாமிய சமய பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், கண்டி தமிழ் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

 

இதன்போது இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர், இந்திய குடியரசு தலைவரின் ஆசிச் செய்தியை உதவித் தூதுவர் வீ.எஸ்.சரண்யா வாசித்தமை குறிப்பிடத்தக்கது

--

Comments
0

MOST READ
01
02
03
04
05