Header Logo

செய்திகள்
விகாரையில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

Jan 28, 2025 - 01:49 PM -

0

விகாரையில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

பெலியத்த பொலிஸ் பிரிவின் பட்டியவெல நிஹலுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் நிலப்பகுதி ஒன்றில் இருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

பெலியத்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27) மாலை இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

நிஹலுவ பகுதியில் உள்ள விகாரையின் நிலப்பகுதி ஒன்றில் கிணறு அமைந்துள்ள பகுதியை சுத்திகரிக்க உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

 

அதன்படி, அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வெடிக்காத மற்றும் துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பெலியத்த பொலிஸார் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்து, இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிப் படை அதிகாரிகளை அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title